திருநெல்வேலி ஸ்டைல் மோர் குழம்பு

Posted By:

கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலுக்கு இதமாக இருக்கும்படியான ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் தயிர் மற்றும் வெள்ளைப் பூசணி உள்ளதா? அப்படியால் அந்த இரண்டையும் கொண்டு மோர் குழம்பு செய்யுங்கள். அதுவும் திருநெல்வேலி ஸ்டைலில் மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

இந்த மோர் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கும். ஏனெனில் வெள்ளை பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. முக்கியமாக இந்த மோர் குழம்பு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

Tirunelveli Style Mor Kuzhambu Recipe In Tamil

உங்களுக்கு திருநெல்வேலி ஸ்டைல் மோர் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருநெல்வேலி ஸ்டைல் மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெள்ளை பூசணிக்காய் - 250 கிராம்
* புளி நீர் - 1/2 கப்
* தயிர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தேங்காய் மசாலாவிற்கு...

* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் மசாலாவிற்கு கொடுத்துள்ள உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து, அதை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்

* பின் அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து சில நொடிகள் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துண்டுகளாக்கி வைத்துள்ள வெள்ளைப் பூசணி, சிறிது உப்பு, மஞ்சள் தூள் 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தயிர், புளி நீர், வேக வைத்துள்ள வெள்ளைப் பூசணி, அரைத்த தேங்காய் விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் தாளித்ததை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி, குழம்பை இன்னும் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான திருநெல்வேலி ஸ்டைல் மோர் குழம்பு தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Friday, April 7, 2023, 13:08 [IST]
Desktop Bottom Promotion