Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அடுத்தமுறை மட்டன் வாங்குனா.. இந்த தெலுங்கானா மட்டன் கறியை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
Telungana Mutton Curry Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? மட்டனை வாங்கினால் எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் குழம்பு, கிரேவி எல்லாம் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் தெலுங்கானா மட்டன் கறியை ஒருமுறை செய்யுங்கள்.
இந்த மட்டன் கறி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த மட்டன் கறியானது சாதம், சப்பாத்தி, பூரி என்று அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது பேச்சுலர்களும் எளிதில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு தெலுங்கானா மட்டன் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தெலுங்கானா மட்டன் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மட்டன் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* பட்டை - 1 பெரிய துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1
* கசகசா - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
குழம்பிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (அரைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய மட்டனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்,
மட்டன் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு பிரட்டி, மூடி வைத்து 1 மணிநேரம்
ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ,
கசகசா, நறுக்கிய தேங்காய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, தேவையான
அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பை சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி, குக்கரை
மூடி, மிதமான தீயில் வைத்து, 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான தெலுங்கானா மட்டன் கறி தயார்.



Click it and Unblock the Notifications











