Just In
- 2 hrs ago
இன்றைய ராசிப்பலன் (28.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- 12 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 13 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- 13 hrs ago
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
Don't Miss
- News
உலகம் முழுக்க.. கொரோனவால் 101,396,366 பேர் பாதிப்பு
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்வீட் கார்ன் மசாலா
பொதுவாக ஸ்வீட் கார்னை வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த ஸ்வீட் கார்னைக் கொண்டு அற்புதமாக ஒரு மசாலா தயாரித்தால், சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்குமானால், அதைக் கொண்டு மறக்காமல் மசாலா தயாரித்து சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும்.
கீழே ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ருசியான... பன்னீர் முந்திரி கிரேவி
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் கார்ன் - 1 1/2 கப்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* தக்காளி - 2 பெரியது
* பூண்டு - 4 பற்கள்
* வரமிளகாய் - 3-4
செய்முறை:
* முதலில் மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைக்கவும்.
* பிறகு அதில் உப்பு, சர்க்கரை, கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் ஸ்வீட் கார்ன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா தயார்.