Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
வண்டிக்கடை சுண்டல் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
Sundal Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி பானி பூரி, மசாலா பூரி, சுண்டல் மசாலா என்று கடைகளில் வாங்கி சாப்பிடுவார்களா? அப்படி கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்தால் இன்னும் நிறைய சாப்பிடலாம் அல்லவா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வண்டிக்கடை சுண்டல் மசாலா ரொம்ப பிடிக்குமானால், அதை மிகவும் சுலபமாக வீட்டில் உள்ள ஒருசில மசாலா பொருட்களைக் கொண்டே செய்யலாம்.
உங்களுக்கு வண்டிக்கடை சுண்டல் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வண்டிக்கடை சுண்டல் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பட்டாணி - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* தக்காளி - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பட்டாணியை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு 8 மணிநேரம் கழித்து, குக்கரில் ஊற வைத்த பட்டாணியை போட்டு,
பட்டாணி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை
மிளகாய், தக்காளி சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, 1 கொத்து
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள்
சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5
நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் வேக வைத்துள்ள பட்டாணியை நீருடன் அப்படியே சேர்த்து, 2
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி மற்றும் சாட் மசாலாவை
சேர்த்து கிளறினால், சுவையான வண்டிக்கடை சுண்டல் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications










