Latest Updates
-
நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும் சிறந்த 5 உணவுகள் - அடிக்கடி சாப்பிடுங்க -
கோடை வெயிலால் கருப்பாகாமல் இருக்கணுமா? அப்ப ஸ்கின் டாக்டர் சொல்ற இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க! -
வாஸ்து படி உங்க வீட்டில் இந்த இடத்தில் குப்பைத்தொட்டி இருந்தால் ஒரு ரூபாய் கூட தங்காதாம் -
World Health Day 2026: உண்மையில் சிறந்த காலை உணவு எது? விளக்கும் டாக்டர். அருண்குமார்! -
பாபா வாங்கா கணிப்பு படி 2043-க்குள் இந்த 44 நாடுகளின் தலையெழுத்து தலைகீழாக மாறப்போகுதாம் -
40 நாட்களுக்கு பின் மீன ராசியில் உதயமாகும் சனிபகவான்: ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கபோகுது! -
உடல் சூட்டைக் குறைக்கும் கம்பு கூழ் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 07 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: ஏப்ரல் 19 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நுங்கு சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Summer Special Madhampatty Rangaraj's Nungu Sukka Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், நுங்கு சீசனும் தொடங்கிவிட்டது. நுங்கு உடலுக்கு குளிர்ச்சியானது. இந்த நுங்கை அதன் சீசனில் மட்டும் தான் சுவைக்க முடியும். அதுவும் நுங்கை இதுவரை நீங்கள் வெறுமனே தான் சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் அந்த நுங்கு கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். முக்கியமாக நுங்கு கொண்டு சுக்கா செய்யலாம் என்பது தெரியுமா? இந்த நுங்கு சுக்கா நிச்சயம் நீங்கள் சுவைத்திராத வகையில் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

இந்த நுங்கு சுக்காவை எப்படி செய்வதென்று மிகவும் பிரபலமான செஃப்பான மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அடுத்தமுறை நீங்கள் நுங்கு வாங்கினால், அந்த நுங்கு சுக்காவை தவறாமல் செய்து சுவைத்துப் பாருங்கள். முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க நினைத்தால், இந்த நுங்கு சுக்காவை செய்து கொடுங்கள். இதனால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.
உங்களுக்கு நுங்கு சுக்கா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* மல்லி - 1 ஸ்பூன்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 3
* பட்டை - 1 துண்டு
* சீரகம் - 1/2 ஸ்பூன்
* சோம்பு - 1 ஸ்பூன்
* வரமிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
* அரைத்த மசாலா - 3 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நுங்கு - 5 (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1/2 ஸ்பூன் (இடித்தது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மல்லி, கிராம்பு, ஏலக்காய், பட்டை,
சீரகம், சோம்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவில் இருந்து 3 ஸ்பூன் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி 1 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய நுங்கை சேர்த்து, மசாலா நுங்குடன்
ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* இறுதியாக பொடித்த மிளகை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான நுங்கு
சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications











