Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பசலைக்கீரை சாம்பார்
உங்களுக்கு கீரையைக் கொண்டு கடைந்தோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சாம்பார் செய்து சுவையுங்கள்.
கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக நோயின்றி இருக்கும். உங்களுக்கு கீரையைக் கொண்டு கடைந்தோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சாம்பார் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். அதுவும் பசலைக்கீரை கொண்டு சாம்பார் செய்தால் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு பசலைக்கீரை கொண்டு சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பசலைக்கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பசலைக்கீரை - 2-3 கப் (நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/2 கப்
* கருப்பு சுண்டல் - 1/2 கப் (ஊற வைத்தது)
* சின்ன வெங்காயம் - 10-12 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி சாறு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள சுண்டலையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக்கீரை மற்றும் சாம்பார் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் வேக வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் கருப்பு சுண்டலை சேர்த்து, ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாறு ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாரில் ஊற்றி கிளறினால், பசலைக்கீரை சாம்பார் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











