Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பசலைக்கீரையை எப்பவும் கடையாம.. ஒருவாட்டி இப்படி சாம்பார் செய்யுங்க.. செமயா இருக்கும்...
Pasalai Keerai Sambar Recipe In Tamil: கோடைக்காலத்தில் மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் உடல் சூட்டைத் தணிக்கும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீரையை செய்யுங்கள். அதுவும் கீரையை வழக்கமாக செய்வது போன்று கடையாமல், சாம்பார் செய்யுங்கள்.
குறிப்பாக பசலைக்கீரையைக் கொண்டு சாம்பார் செய்யும் போது, அந்த சாம்பார் ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி கீரையை சாம்பார் செய்தால், கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒருமுறை கீரை சாம்பார் செய்தால், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு பசலைக்கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பசலைக்கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* புளிச்சாறு - 1/2 கப்
* பசலைக்கீரை - 1 கட்டு (நறுக்கியது)
* வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 1 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் துவரம் பருப்பை சேர்த்து, அத்துடன் 1/4
டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் மற்றும் 1 கப்
நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம்,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சாம்பார்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி,
புளிச்சாற்றினை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள 1 கட்டு பசலைக்கீரையை சேர்த்து
கிளறி, வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, 1
டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட்டு, 5
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பசலைக்கீரை சாம்பார்
தயார்.



Click it and Unblock the Notifications











