Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
எப்பவும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவல் செய்யாம.. ஒரு டைம் இப்படி ட்ரை பண்ணுங்க.. செம டேஸ்டியா இருக்கும்..
Spicy Potato Roast Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அதனாலேயே அடிக்கடி வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? அதுவும் மதிய வேளையில் உருளைக்கிழங்கு வறுவலை எப்போதும் ஒரே மாதிரி செய்வீர்களா?
அப்படியானால், அடுத்தமுறை உருளைக்கிழங்கு வறுவலை செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்யுங்கள். இந்த ஸ்டைலில் மசாலா அரைத்து சேர்க்கப்படும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
* சோம்பு தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
* பூண்டு - 6-8 பல்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி
நீரில் போட்டு கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனை எடுத்து, அதில் துண்டுகளாக்கப்பட்ட
உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ளதை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சோம்புத் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு,
மிளகுத் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கைகளால் நன்கு
பிரட்டி விட வேண்டும்.
* பிறகு அந்த பேனை அப்படியே அடுப்பில் வைத்து கிளறி, மூடி வைத்து
உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து 2 நிமிடம் நன்கு
ப்ரை செய்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
Image Courtesy: Madras Samayal



Click it and Unblock the Notifications











