Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
மீல் மேக்கரும், பட்டாணியும் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. கணக்கில்லாம சாப்பிடுவாங்க...
Mealmaker Peas Kheema Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைப்பீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் வாய்க்கு ருசியாக ஏதேனும் சைடு டிஷ் செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் இருப்போருக்கு மீல் மேக்கர் பிடிக்குமா? அப்படியானால் அந்த மீல் மேக்கருடன், பச்சை பட்டாணியையும் சேர்த்து, அருமையான சுவையில் கீமா மசாலா செய்யுங்கள். இந்த மீல் மேக்கர் பட்டாணி கீமா மசாலாவை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சப்பாத்தியை சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவை அருமையாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் பட்டாணி கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் பட்டாணி கீமா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் 100 கிராம்
* சுடுநீர்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 3
* பட்டை - 1 துண்டு
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 100 கிராம் மீல்மேக்கரை எடுத்துக்
கொண்டு, அதில் மீல்மேக்கர் மூழ்கும் அளவில் நன்கு கொதிக்கும் சுடுநீரை
ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, மீல் மேக்கரில் உள்ள
அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை
சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்
தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து கிளறி,
சிறிது நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை பட்டாணியையும்
சேர்த்து, 5 நிமிடம் நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைத்து,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மீல்மேக்கர் பட்டாணி
கீமா மசாலா தயார்.



Click it and Unblock the Notifications











