For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீர் செஸ்ட் நட் (வாட்டர் செஸ்னெட்) மற்றும் காளான் ஃப்ரை- வீடியோ

நாங்கள் இங்கே ஒரு முற்றிலும் புதிய உணவை உங்களுக்காக வழங்கியுள்ளோம். இதை வரும் ஞாயிறு கிழமையில் முயற்சி செய்து பாருங்கள்.

By Batri Krishnan
|

நீங்கள் ஒரு சைவ உணவுப் பிரியர் எனில் இது உங்களுக்கானது. சுவை மிகுந்த மற்றும் ஆரோக்கியமான இந்த உணவை உங்களின் குடும்பத்திற்கு வழங்கி அவர்களை ஆச்சர்யப்படுத்துங்கள். ஏனெனில் இந்த தண்ணீர் கஷ்கொட்டை(வாட்டர் செஸ்னெட்) காளான் ஃப்ரை முற்றிலும் வித்தியாசமானது.


நீங்கள் இதை வறுத்த சில்லி சிக்கன் மசாலாவிற்கு பதிலாக ஃப்ரைட் ரைஸ் உடன் பறிமாறினால், அசைவ உணவு விரும்பிகளும் இதை அதிகம் விரும்புவார்கள். அப்புறம் உங்களுக்கு எதுவும் கிடைக்காது.

இந்த உணவின் செய்முறை மிகவும் எளிதானது மற்றும் இதற்கு தேவைப்படும் பொருட்கள் கூட உங்களுடைய உள்ளூர் சந்தையில் மிகவும் எளிதாக கிடைக்கும்.

பறிமாறும் அளவு - 4 பேர்


தயாரிப்பு நேரம் - 15 நிமிடங்கள்


சமையல் நேரம் - 20 நிமிடங்கள்


தேவையான பொருட்கள்:

1. தண்ணீர் கஷ்கொட்டை(வாட்டர் செஸ்னெட்) - 1 கப் (நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது)

2. பட்டன் காளான் - 1 கப் (நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது)

3. பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)

4. பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது)

5. இஞ்சி - 1 துணுக்கு (நறுக்கியது)

6. வெங்காயம் - 1 நடுத்தர அளவு (துண்டுகளாக்கப்பட்டது)

7. சிப்பி சாஸ் - 1 டீஸ்பூன்

8. சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

9. உப்பு - தேவைக்கேற்ப

10. சர்க்கரை - ஒரு சிட்டிகை

11. எண்ணெய் - சமையலுக்கு தேவையான அளவு

12. கருப்பு மிளகு - 1 தேக்கரண்டி (நசுக்கியது)

13. வினிகர் - 1 தேக்கரண்டி

14. சோள மாவு - 2 தேக்கரண்டி

15. கொத்தமல்லி - 1 கொத்து (நறுக்கியது)


செயல்முறை:

1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.

2. இப்போது, கடாயில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.


3. இப்பொழுது வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வெளிர் நிறமாக வரும் வரை நன்கு வதக்கவும்.

4. வெங்காயம் வறுபட்ட பின்னர் கடாயில் காளான் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.


5. கலவையை நன்கு கலக்கவும். காளானில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படும் வரை நன்கு வதக்கவும்.

6. காளானின் தண்ணீர் வற்றிய பின்னர், கடாயில் நீர் கஷ்கொட்டை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.


7. இப்போது, உங்களின் உணவில் சாஸ் சேர்க்க வேண்டிய நேரம். கலவையில் சிப்பி சாஸ் சேர்க்கவும். அதன் பின்னர் சோயா சாஸை சிறிது சிறிதாக சேர்க்கவும். இறுதியாக சர்க்கரையை சேர்க்க மறவாதீர்கள். இது உங்களின் உணவிற்கு சிறிது இனிப்பு சுவை கொடுக்கும்.

8. இப்போது, சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும். க்ரேவி பதத்திற்கு தேவையான சோள மாவை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.


9. க்ரேவி நன்கு கொதித்த பின்னர் அதனுடன் நறுக்கப்பட்ட கொத்தமல்லியை சேர்க்கவும்.

10. க்ரேவி நன்கு வெந்த பின்னர் அதை நன்கு கலக்கி அடுப்பை அணைத்து விடவும்.


11. அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி வினிகர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

12. இந்த க்ரேவியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதை கொத்த மல்லி கொண்டு அழகுபடுத்தவும்.

இப்பொழுது உங்களுடைய தண்ணீர் கஷ்கொட்டை மற்றும் காளான் ப்ரை பறிமாற தயாராக உள்ளது.

English summary

water chestnut and mushroom fry

water chestnut and mushroom fry
Desktop Bottom Promotion