Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஜவ்வரிசி போண்டா
மாலை வேளையில் மழை வரும் நேரத்தில் சூடாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல் தோன்றும். அதற்கு பஜ்ஜி, போண்டா தான் சிறந்தது. அதிலும் போண்டா தான் அட்டகாசமாக இருக்கும். இந்த போண்டாவில் பல வெடிரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜவ்வரிசி போண்டா.
இந்த போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். மேலும் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த ஜவ்வரிசி போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 4
இஞ்சி பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை வெதுவெதுப்பான நீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதற்குள் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து, தோலுரித்து, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு, பின் அதில் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி பேஸ்ட், மிளகாய் பேஸ்ட், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
விருப்பமிருந்தால், அதில் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து, அத்துடன் கடலை மாவு சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதனை எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி போண்டா ரெடி!!!
Image Courtesy: tamilkurinji



Click it and Unblock the Notifications
