Latest Updates
-
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்!
உருளைக்கிழங்கு கேக்
உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் அனைத்து ரெசிபிக்களுமே மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும். பொதுவாக உருளைக்கிழங்கு கொண்டு மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் உருளைக்கிழங்கு கேக் செய்து சாப்பிட்டிருக்கமாட்டோம். மேலும் பலர் இப்படியொரு ரெசிபியை கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிடும் வகையில் உருளைக்கிழங்கு கேக்கை எப்படி செய்வதென்று உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சி செய்மு பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 3 (தோலுரித்து, துருவியது)
மைதா - 4 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1 (அடித்துக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் அதில் மைதா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை வட்டமாகவும், தடிமனாகவும் தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு கேக் ரெடி!!!
குறிப்பு:
ஒருவேளை கலவை சற்று நீர்மமாக இருந்தால், சிறிது மைதா சேர்த்து கலந்து கொள்ளவும்.



Click it and Unblock the Notifications
