Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ரசம் சாதத்துக்கு ஒருடைம் சிக்கனை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. சும்மா அல்டிமேட்டா இருக்கும்...
Somberi Chicken Roast Recipe In Tamil: வார விடுமுறை நாட்களில் வீட்டில் பல வெரைட்டியான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவீர்களா? ஆனால் இன்று உங்களுக்கு சமைக்க சோம்பேறித்தனமாக உள்ளதா? ஆனால் ஏதாவது சமைத்தாக வேண்டும் அல்லவா?
அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கனை வாங்கி வந்து, சோம்பேறி சிக்கன் ரோஸ்ட் செய்து, ரசம் சாதத்துடன் சாப்பிடுங்கள். ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும். சோம்பேறி சிக்கன் ரோஸ்ட் அதன் பெயருக்கு ஏற்பவே டக்கென்று செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சோம்பேறி சிக்கன் ரோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோம்பேறி சிக்கன் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 துண்டு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, 2 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். அதற்குள் மிக்சர்
ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், கரம் மசாலா,
சிக்கன் மசாலா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்ததை சிக்கனுடன் சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி
பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சிக்கனில் உள்ள நீர் வற்றும் வரை ரோஸ்ட்
செய்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சோம்பேறி சிக்கன்
ரோஸ்ட் தயார்.



Click it and Unblock the Notifications











