Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா?
வீட்டுல 2 குடைமிளகாய் இருக்கா.. அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்...
Green Capsicum Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போறீங்களா? அதற்கு சைடு டிஷ் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா?
அப்படியானால் அந்த குடைமிளகாயைக் கொணடு அசத்தலான சுவையில் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லி தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 2
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் . 4
* சீரகம் -1 டீஸ்பூன்
* புளி - 1 துண்டு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் குடைமிளகாயை கழுவி, அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு,
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக
வறுத்து, அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, , அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் குடைமிளகாயை சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பின்
தேங்காள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் வறுத்த பொருட்களையும்
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கிளறினால், சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











