Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா?
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சா டேஸ்ட் தாறுமாறா இருக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Sesame Chutney Recipe in Tamil: காலையும், மாலையும் வந்தாலே பெண்களுக்கு என்ன சமையல் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளது. அதுவும் எத்தனை சட்னிகள் தெரிந்தாலும், இட்லி, தோசைக்கு என்ன சட்னியை இன்று செய்வது என்று முடிவெடுப்பது கடினமாக இருக்கும்.
நீங்கள் இன்று வீட்டில் இட்லி தோசை செய்யப்போகிறீர்கள் என்றால், அதற்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், எள் மற்றும் தேங்காய் வைத்து கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த எள் சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் வித்தியாசமாக மற்றும் சூப்பராக இருக்கும். இந்த சூப்பரான எள்ளு தேங்காய் சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கப் துருவிய தேங்காய் அல்லது உப்பு நீக்கிய தேங்காய்
- 3 ஸ்பூன் வெள்ளை எள்
- 2 ஸ்பூன் வேர்க்கடலை
- 1 ஸ்பூன் புளிச்சாறு
- 3 காஷ்மீர் மிளகாய்
- 2 வர மிளகாய்
- 3 பூண்டு பற்கள்
- உப்பு தேவைக்கேற்ப
- தண்ணீர் தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், வேர்க்கடலையைச் சேர்த்து, அவை மொறுமொறுப்பாக மாறும் வரை அடிக்கடி கிளறி வறுக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில், எள்ளைச் சேர்த்து, அவை லேசான பொன்னிறமாக மாறி வெடிக்கும் வரை அடிக்கடி கிளறி வறுக்கவும். இதையும் தனியாக எடுத்து ஓரமாக வைத்துக் கொள்ளவும். வேர்க்கடலை மற்றும் எள்ளை குளிர வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில், வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள் மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
- பின்னர் புளிச்சாறு, பூண்டு பல், காஷ்மீர் மிளகாய் சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
- கடைசியாக, உங்கள் சட்னி எந்த பதத்தில் வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- அனைத்து பொருட்களையும் மென்மையாகும் வரை நன்றாக அரைக்கவும்.
- இந்த சுவையான எள் சட்னியை இட்லி, தோசை, ஊத்தப்பம் மற்றும் மெது வடை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
- இந்த சட்னிக்கு கருப்பு எள், வெள்ளை எள் இரண்டையுமே பயன்படுத்தலாம். அதேபோல வர மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாயையும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











