பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார்

உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு சாம்பாரை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் உங்கள் வீட்டில் சாம்பார் செய்வதற்கு பருப்பு இல்லையா? அப்படியானால் பருப்பு இல்லாத சாம்பாரை செய்யுங்கள்.

Posted By:

உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு சாம்பாரை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் உங்கள் வீட்டில் சாம்பார் செய்வதற்கு பருப்பு இல்லையா? அப்படியானால் பருப்பு இல்லாத சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பாரை இன்ஸ்டன்ட் சாம்பார் என்றும் கூறலாம். இந்த சாம்பாரை 10 நிமிடத்தில் தயாரிக்கலாம். குறிப்பாக இந்த சாம்பார் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

Sambar Without Dal Recipe In Tamil

உங்களுக்கு பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பாரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

* வெங்காயம் - 1 (நறுக்கியது)

* தக்காளி - 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)

* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து தோலுரித்தது மற்றும் துண்டுகளாக்கப்பட்டது)

* தண்ணீர் - தேவையான அளவு

* உப்பு - சுவைக்கேற்ப

* சர்க்கரை - 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி கிளற வேண்டும்.

* பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளை சேர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், இன்ஸ்டன்ட் சாம்பார் தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Desktop Bottom Promotion