இட்லி, தோசைக்கு ரோட்டுக்கடை வெங்காய சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Rottukadai Vengaya Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் வீட்டில் தக்காளி இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் வெங்காயம் இருக்கிறதா?

அப்ப அந்த வெங்காயத்தைக் கொண்டு ரோட்டுக்கடை ஸ்டைலில் வெங்காய சட்னி செய்யுங்கள். இந்த வெங்காய சட்னி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Rottukadai Vengaya Chutney How To Make a Rottukadai Onion Chutney Recipe

உங்களுக்கு ரோட்டுக்கடை வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 8
* வரமிளகாய் - 5
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் வெட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - 1 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து, மிதமான தீயில் வைத்து லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு பெரிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிய துண்டு புளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி, ஒரு தட்டில் மாற்றி குளிர வைக்க வேண்டும். வாணலியிலேயே இருந்தால் வெங்காயம் அதிகமாக வெந்து, சட்னி இனிப்பாக இருக்கும். எனவே தட்டில் மாற்றி குளிர வையுங்கள்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். பின் சட்னிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, சட்னியுடன் சேர்த்தால், சுவையான ரோட்டுக்கடை வெங்காய சட்னி தயார்.

Image Courtesy: Gomathi's Kitchen

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 5, 2024, 7:38 [IST]
Desktop Bottom Promotion