இட்லி, தோசைக்கு ஒருமுறை தக்காளியை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்....

Posted By:

Rottukadai Thakkali Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்ய போகிறீர்களா? அதற்கு சற்று புளிப்பான, அதே சமயம் ருசியான ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளி அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ரோட்டுக்கடை தக்காளி சாம்பாரை செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Rottukadai Thakkali Sambar How To Make a Tomato Sambar Recipe

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 3
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* இட்லி மாவு - 1 சிறிய கரண்டி

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பச்சை மிளகாய் மற்றும் பூண்டையும் நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சுவைக்கேற்ப உப்பு, சாம்பார் தூள் மற்றும் 1 டம்ளர் நீரை ஊற்றி குக்கரை மூடி, 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதம், குக்கரைத் திறந்து, அதில் இட்லி மாவை ஒரு கரண்டி சேர்த்து நன்கு கிளறி, ஒரு 5-10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். ,
* அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பலை சேர்த்து தாளித்து, தக்காளி சம்பாருடன் சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், ரோட்டுக்கடை சுவையான தக்காளி சாம்பார் தயார்.

Image Courtesy: Chitra's Food Book

[ of 5 - Users]
Story first published: Monday, March 11, 2024, 7:13 [IST]
Desktop Bottom Promotion