Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மழை நேரத்துல 15 நிமிடத்தில் இப்படி தக்காளி சூப் செஞ்சு குடிங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட...
Restaurant Style Tomato Soup Recipe In Tamil: தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதோடு, மழையும் பெய்வதால், சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனையால் பலரும் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப், கசாயம் போன்றவற்றை செய்து சாப்பிடுவோம். இது உடலுக்கு இதமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.
அதுவும் சூப்பில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் மிகவும் சுவையானதும், சத்தானதும் தான் தக்காளி சூப். இந்த தக்காளி சூப் ரெஸ்டாரண்ட்டுகளில் மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட தக்காளி சூப்பை உங்களுக்கு செய்ய தெரியாதா? அதை உங்கள் வீட்டில் செய்து சாப்பிட வேண்டுமா? அதுவும் 15 நிமிடத்தில் இந்த சூப்பை செய்யலாம்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தக்காளி சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தக்காளி சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* மிளகு - 1 டீஸ்பூன்
* பெங்களூர் தக்காளி - 4 (நறுக்கியது)
* கேரட் - 1 (நறுக்கியது)
* காஷ்மீரி வரமிளகாய் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5 பல்
* சிறிய அளவிலான வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 3/4 லிட்டர் அல்லது 3 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* சோள மாவு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரட் - 3 (சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
ஊருகியதும், பிரியாணி இலை, மிளகு சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளி, கேரட், காஷ்மீரி வரமிளகாய்,
இஞ்சி, பூண்டு, சிறிய அளவிலான வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 3/4 லிட்டர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை ஒரு பாத்திரத்தில்
சல்லடையைப் பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வடிகட்டிய தக்காளியை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதையும் சல்லடைப் பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் சோள மாவை நீரில் கரைத்து ஊற்றி, அடுப்பில் வைத்து,
சூப்பை 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து சூப்பை அணைத்துவிட்டு, அதில் சுவைக்கேற்ப மிளகுத்
தூள் சேர்த்து, சிறிது கொத்தமல்லியை தூவி கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக ப்ரை
செய்து எடுத்து, அதை தக்காளி சூப்புடன் சேர்த்தால், ருசியான
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தக்காளி சூப் தயார்.



Click it and Unblock the Notifications











