Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
1 கப் சிவப்பு அவலும், 2 முட்டையும் இருந்தா.. காலையில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் எடை கடகடன்னு குறையும்..
Red Aval Egg Upma Recipe In Tamil: தினமும் காலையில் உங்கள் வீட்டில் ஒரே மாதிரியான டிபனை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான ஒரு டிபனை செய்ய நினைக்கிறீர்களா? .அதுவும் சத்தான காலை உணவை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் சிவப்பு அவல் மற்றும் முட்டை இருந்தால், அவற்றைக் கொண்டு உப்புமா செய்யுங்கள். இந்த உப்புமா வழக்கமான உப்புமாவை விட வித்தியாசமாக இருப்பதால், வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த உப்புமாவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, வேறு சில சத்துக்களும் நிறைந்துள்ளதால். இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

உங்களுக்கு சிவப்பு அவல் முட்டை உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிவப்பு அவல் முட்டை உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிவப்பு அவல் - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைகேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* முட்டை - 2
* சில்லி ப்ளேக்ஸ் - சிறிது
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சிவப்பு அவலை எடுத்து, அதில் நீரை
ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, அவலை நீரில் இருந்து பிழிந்து தனியாக ஒரு
கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் குடைமிளகாயை சேர்த்து, சுவைக்கேறப் உப்பு மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து கிளறி, மூடி வைத்து குடைமிளகாயை வேக வைக்க
வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, அதில் சிவப்பு அவலை சேர்த்து நன்கு ஒன்று
சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பின் நடுவில் குழி போன்று செய்து, அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி,
சிறிது உப்பு மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி, அவலுடன் ஒன்று
சேரும் வரை நன்கு கிளறி, மிளகுத் தூள் தூவி பிரட்டி இறக்கினால்,
சுவையான சிவப்பு அவல் முட்டை உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications






