Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
Pacha Vengaya Chutney Recipe: வெங்காய சட்னி
வீட்டில் தக்காளி இல்லாத சமயத்தில் இட்லி தோசைக்கு ஒரு சுவையான மற்றும் ஈஸியான ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், வெங்காய சட்னி செய்யுங்கள்.
தற்போது தக்காளியின் விலை அதிகம் இருப்பதால், பலரும் தக்காளியை அளவாக தங்கள் சமையலில் சேர்க்கிறார்கள். ஆனால் வீட்டில் தக்காளி இல்லாத சமயத்தில் இட்லி தோசைக்கு ஒரு சுவையான மற்றும் ஈஸியான ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், வெங்காய சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு 4-5 பொருட்களே போதும். முக்கியமாக இந்த சட்னியை வதக்கி அரைக்க வேண்டிய அவசியமில்லை; அப்படியே அரைத்து தாளித்து சாப்பிடலாம்.

உங்களுக்கு வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* பூண்டு - 4 பல்
* புளி பேஸ்ட் - 2 டீஸ்பூன்/ புளி - ஒரு சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், வரமிளகாய், பூண்டு, புளி மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* தாளித்ததை சட்னியில் சேர்த்து கிளறினால், வெங்காய சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications












