Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க..
Hotel Style Rava Upma Recipe In Tamil: தினமும் இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது உப்புமா செய்யுங்கள். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் உப்புமா என்றாலே அலறி அடித்துக் கொண்டு ஓடுவார்களா? அப்படியானால் அத்தகையவர்களுக்கு ரவா உப்புமாவை ஹோட்டல் ஸ்டைலில் செய்து கொடுங்கள். ஹோட்டல் உப்புமாவானது பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.

இப்படி ஹோட்டல் உப்புமா மென்மையாக இருப்பதன் ரகசியம் என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஹோட்டல் ஸ்டைல் ரவா உப்புமா பஞ்சு போல இருக்க காரணம் அதில் சேர்க்கப்படும் நீரின் அளவும், செய்யும் பக்குவமும் தான். இந்த சுவையில் உப்புமா செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த ஹோட்டல் ஸ்டைல் ரவா உப்புமா ரெசிபி குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் ரவா உப்புமா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் ரவா உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 3 1/2 கப்
* எண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/4 டீஸ்பூன்
* முந்திரி - 6 (உடைத்தது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி - தேவையான அளவு (வேக வைத்தது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வாங்கிபாத் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* நெய் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 1/2 கப் நீரை
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு உப்புமாவிற்கு தேவையான அளவு கேரட், பீன்ஸ், பட்டாணி
ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நீரை ஊற்றி காய்கறிகளை
வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலைப் பருப்பு,
கறிவேப்பிலை மற்றும் உடைத்த முந்திரியை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் ரவையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும்
சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், வேக வைத்த காய்கறிகள், நறுக்கிய தக்காளி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு மேலே வாங்கிபாத் பவுடரை தூவி, 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் துருவிய தேங்காய், 1 1/2
டீஸ்பூன் நெய் மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான ஹோட்டல் ஸ்டைல் ரவா கிச்சடி/காரா பாத் தயார்.



Click it and Unblock the Notifications











