Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
கல்யாண வீட்டு ரவா கிச்சடி ருசியா இருப்பதன் ரகசியம் இந்த ஒரு பொருள் தாங்க... என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க..
Kalyana Veetu Rava Kichadi Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உப்புமா செய்யலாம் என்றால் உங்கள் வீட்டில் உள்ளோர் வேண்டாம் என்பார்களா? அப்படியானால் அப்படிப்பட்டவர்களுக்கு ரவையைக் கொண்டு கல்யாண வீட்டு ஸ்டைலில் கிச்சடியை செய்யுங்கள்.
இந்த கல்யாண வீட்டு ரவா கிச்சடி மட்டும் ருசியாக இருக்க, அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் காரணம். அது தான் பால். இப்படி பால் சேர்த்து செய்யும் போது, அந்த கிச்சடியின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இப்படி ரவா கிச்சடி செய்தால், பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கல்யாண வீட்டு ரவா கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு ரவா கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவா - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 2
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 சிறிய பல்
* உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1 கையளவு
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பால் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை சேர்த்து,
நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாற வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ,
பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடியாக
நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை
பட்டாணியை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
மூடி வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, காய்கறிகளை வேக வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் மஞ்சள் தூள், நறுக்கிய
தக்காளி மற்றும் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும், அதில் வறுத்த ரவையை
சேர்த்து கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து
வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மீண்டும் நன்கு கிளறி விட்டு,
மீண்டும் மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, 1 டேபிள் ஸ்பூன்
நெய் சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான கல்யாண வீட்டு
ரவா கிச்சடி தயார்.



Click it and Unblock the Notifications