For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினை மாவு பூரி சாப்பிட்டிருக்கீங்களா?... ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க... அப்புறம் விடவே மாட்டீங்க...

Posted By: R. SUGANTHI Rajalingam
|
செய்முறை ராஜ்கிரா பூரி ரெசிபி | ராஜ்கிரா பூரி ரெசிபி | Boldsky

நவராத்திரி விரதம் என்றாலே எல்லாரும் விரதம் இருந்து கடவுளை வழிபடுவது வழக்கம். மேலும் இந்த மாதிரியான நேரங்களில் நிறைய உணவு வகைகளை வீட்டில் செய்து எல்லாருக்கும் கொடுத்து மகிழவும் செய்வோம். ஒரு நீண்ட விரதம் இருக்க கண்டிப்பாக ஊட்டச்சத்து மிக்க ரெசிபி நம்மளுக்கு தேவை. அது தான் இந்த ராஜ்கிரா பூரி ரெசிபி. உங்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பதோடு உங்கள் வயிறையும் மனதையுமே சேர்த்து நிரப்பி விடும்.

ராஜ்கிரா பூரி என்பது அப்படியே ஸ்பெஷல் ராஜ்கிரா மாவை பிசைந்து அதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து செய்யும் ருசியான பூரி யாகும். அதன் மென்மையான அமைப்பும், டேஸ்ட் டும் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். கலோரி குறைந்த உணவு என்பதால் டயட் பாலோ செய்பவர்கள் கூட எடுத்து கொண்டு மகிழலாம்.
எனவே இந்த நவராத்திரி விரதத்திற்கு நீங்கள் இதை தேர்ந்தெடுத்து செய்வது இது உங்கள் விரதத்தை மேலும் விரதத்தை சிறப்பாக்கும்.இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Rajgira Poori Recipe
ராஜ்கிரா பூரி ரெசிபி /நவராத்திரி ஸ்பெஷல் ராஜ்கிரா பூரி ரெசிபி /நவராத்திரி விரதம் ரெசிபிகள்/ராஜ்கிரா பூரி செய்முறை விளக்கம் /ராஜ்கிரா பூரி வீடியோ
ராஜ்கிரா பூரி ரெசிபி /நவராத்திரி ஸ்பெஷல் ராஜ்கிரா பூரி ரெசிபி /நவராத்திரி விரதம் ரெசிபிகள்/ராஜ்கிரா பூரி செய்முறை விளக்கம் /ராஜ்கிரா பூரி வீடியோ
Prep Time
20 Mins
Cook Time
20M
Total Time
40 Mins

Recipe By: மீனா பந்திரி

Recipe Type: காலை உணவு

Serves: 2

Ingredients
  • ராஜ்கிரா மாவு (தினை) - 1 கப்

    உருளைக்கிழங்கு - 1

    கொத்தமல்லி இலைகள்-நறுக்கியது (1 கைப்பிடியளவு)

    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    ராக் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்து கொள்ளவும்

    பிறகு அதை நன்றாக பிசைந்து கொள்ளவும்

    இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி இலைகள், ராக் சால்ட், நெய் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

    அதனுடன் ராஜ்கிரா மாவையும் சேர்த்து அப்படியே மாவை பூரி பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்

    5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக மாவை உருட்டி கொள்ளவும்

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி 4-5 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்

    ஒவ்வொரு உருண்டையையும் பூரி மாதிரி தேய்த்து ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்

    பூரியின் விளம்புகள் நன்றாக மொறு மொறுவென வரும் வரை காத்திருந்து பொரிக்கவும்

    அப்படியே அதை ஒரு தட்டிற்கு மாற்றி உங்களுக்கு பிடித்தமான சைடிஸ் உடன் பரிமாறவும்.

Instructions
  • வேக வைத்த உருளைக்கிழங்கில் உள்ள தண்ணீர் பதத்தை கொண்டே மாவை பிசைய முயற்சி செய்யுங்கள். அதிக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
  • விரதம் இருந்தால் ராக் சால்ட் சேர்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சாதாரண உப்பே போதும்
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1
  • கலோரிகள் - 75

படத்துடன் செய்முறை விளக்கம் :ராஜ்கிரா பூரி செய்வது

எப்படிஉருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்து கொள்ளவும்

பிறகு அதை நன்றாக பிசைந்து கொள்ளவும்

இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி இலைகள், ராக் சால்ட், நெய் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

அதனுடன் ராஜ்கிரா மாவையும் சேர்த்து அப்படியே மாவை பூரி பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்

5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக மாவை உருட்டி கொள்ளவும்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி 4-5 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்

ஒவ்வொரு உருண்டையையும் பூரி மாதிரி தேய்த்து ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்

பூரியின் விளம்புகள் நன்றாக மொறு மொறுவென வரும் வரை காத்திருந்து பொரிக்கவும்

அப்படியே அதை ஒரு தட்டிற்கு மாற்றி உங்களுக்கு பிடித்தமான சைடிஸ் உடன் பரிமாறவும்.

[ 5 of 5 - 39 Users]
Read more about: recipes
English summary

Rajgira Poori Recipe | Navratri Special Rajgire Puri Recipe | Navratri Vrat Recipes

Rajgira Poori recipe is one of the most ideal meals for the Navratri vrat season. Made exclusively with rajgira atta and a delicious potato filling, this dish will not only keep you full for a long time, during the time of fast, but also lend you nutrients to keep you healthy.Rajgira poori is made essentially with rajgira atta and potato filling.
Desktop Bottom Promotion