Latest Updates
-
வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 செடிகள் போதும், அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
தோசையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? இது தமிழ்நாட்டில் இல்லையாம் -
செஃப் வாணி ஸ்டைல் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம் -
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
ராகி பன் தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்..- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Ragi Bun Dosa With Peanut Chutney Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரியான டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஒரு காலை டிபன் சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ராகி பன் தோசையையும், வேர்க்கடலை சட்னியையும் செய்து சாப்பிடுங்கள்.
இந்த காம்போ கோடைக்காலத்தில் சாப்பிட ஏற்றது. ராகியை இதுவரை வெறும் கூழாக, களியாக, ரொட்டியாக அல்லது தோசையாக சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு பன் தோசை செய்து சாப்பிடுங்கள். ருசி வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு ராகி பன் தோசையையும், வேர்க்கடலை சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பன் தோசை மற்றும் வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவிற்கு...
* ராகி மாவு - 1 கப்
* ரவை - 1 கப்
* புளித்த தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப் + 1/4 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 3 பல்
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 2 சில்லு (பொடியாக நறுக்கியது)
* வறுத்த வேர்க்கடலை - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
பன் தோசை தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ரவை, புளித்த தயிர்
மற்றும் 1 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து, மூடி வைத்து 15
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை
சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பூண்டு மற்றும் புளியை சேர்த்து நன்கு வதக்கி,
அதையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய், வறுத்த வேர்க்கடலை, வரமிளகாய்,
பூண்டு, புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கலந்து விட
வேண்டும்.
* அதன் பின் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, சட்னியை தாளிக்க
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், வேர்க்கடலை
சட்னி தயார்.
* அடுத்து சட்னி தாளித்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பன்
தோசை தாளிப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு,
உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லியை தூவி 1 நிமிடம்
வதக்கி இறக்கி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த மாவை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் வதக்கி குளிர
வைத்துள்ள பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கலந்து
விட வேண்டும்.
* மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால், 1/4 டம்ளர் நீரை ஊற்றி கலந்து
கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு சிறிய தவா அல்லது ஆப்ப கல்லை அடுப்பில் வைத்து
சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி மூடி
வைத்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, பன் தோசையை திருப்பி போட்டு 1 நிமிடம் வேக
வைத்து எடுத்தால், சுவையான ராகி பன் தோசை தயார்.



Click it and Unblock the Notifications


