Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
ஒரு கப் ராகி மாவும், 1 கேரட்டும் இருந்தா. . காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. அருமையா இருக்கும்..
Ragi Carrot Adai Recipe In Tamil: காலையில் எப்பவும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்வீங்களா? இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் ராகி மாவும், கேரட்டும் இருந்தா, அதைக் கொண்டு அடை செய்து சாப்பிடுங்கள். இந்த ராகி கேரட் அடை ருசியாக இருப்பதோடு, சத்தானதும் கூட. மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். முக்கியமாக இதற்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவையில்லை.
உங்களுக்கு ராகி கேரட் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி கேரட் அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவை சேர்த்து
லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம்
வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் துருவிய கேரட்டை சேர்த்து கேரட்டின் நிறம் மாறும்
வரை வதக்கி,கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு வதக்கியதை ராகி மாவுடன் சேர்த்து நன்கு கிளறி, கொஞ்சம்
கொஞ்சமாக நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உருட்டி ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாழை இலை அல்லது பால் கவரை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, உருட்டி வைத்துள்ள ஒரு உருண்டையை எடுத்து மெலிசாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் அதில்
தட்டி வைத்துள்ள அடையை சேர்த்து எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான ராகி கேரட் அடை தயார்.
Image Courtesy: Gomathi's Kitchen



Click it and Unblock the Notifications
