புளியும், வரமிளகாயும் இருந்தா போதும்... 5 நிமிடத்தில் இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி செய்யலாம்..

Posted By:

Tamarind Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? 5 நிமிடத்தில் ஒரு சுவையான சட்னியை செய்ய வேண்டுமா?

அப்படியானால் புளி மற்றும் வரமிளகாய் கொண்டு சுவையான சட்னியை செய்யுங்கள். இந்த புளி சட்னி புளிப்பு, இனிப்பு, காரம் என அனைத்து சுவையும் கலந்திருப்பதால், இட்லியுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னி 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

Puli Chutney How To Make a Tamarind Chutney Recipe

உங்களுக்கு புளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வரமிளகாய் - 5-6
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* சுடுநீர்
* சின்ன வெங்காயம் - 25
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் வரமிளகாய் மற்றும் புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு பற்களை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த வெங்காய பூண்டு விழுதை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த புளியை சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான புளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, December 16, 2024, 7:54 [IST]
Desktop Bottom Promotion