புதினா தக்காளி சட்னியை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க.. அட்டகாசமா இருக்கும்...

Posted By:

Pudina Thakkali Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சற்று புளிப்பான அதே சமயம் சத்தான குளிர்ச்சியான ஒரு சட்னியை செய்ய வேண்டுமா?

அப்படியானால் வீட்டில் புதினாவும், தக்காளியும் இருந்தால், அதைக் கொண்டு புதினா தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். முக்கியமாக வேலைக்கு செல்வோர் மற்றும் பேச்சுலர்களுக்கு ஏற்ற ஈஸியான சட்னி இது.

Pudina Thakkali Chutney: How To Make A Mint Tomato Chutney Recipe

உங்களுக்கு புதினா தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பெரிய வெங்காயம் - 4
* பெரிய தக்காளி - 2
* புதினா - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். வரமிளகாய் நன்கு உப்பி வந்துவிட்டால், வரமிளகாய் வறுபட்டுவிட்டது என்று அர்த்தம்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு 2 கைப்பிடி அளவு புதினாவை எடுத்து நீரில் அலசி, தக்காளியுடன் சேர்த்து ஒரு 20 நொடிகள் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து, மிக்சர் ஜாரில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். நீர் சேர்க்க தேவையில்லை.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, எண்ணெயுடன் சேர்த்து கிளறினால், சுவையான புதினா தக்காளி சட்னி தயார்.

Image Courtesy: Mana Chef

[ of 5 - Users]
Desktop Bottom Promotion