Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
2 ஸ்பூன் பொட்டுக்கடலை இருந்த போதும் தோசைக்கு அட்டகாசமான சைடிஷ் 10 நிமிஷத்துல செஞ்சுரலாம்...!
Pottukadalai Kurma Recipe in Tamil: பெரும்பாலான தமிழக வீடுகளில் பிரதான உணவாக இருப்பது தோசைதான். தினமும் சாப்பிட்டாலும் பெருமபாலும் நமக்கு தோசை போரடிப்பதில்லை. ஆனால் ஒரே மாதிரியான தேங்காய் சட்னி மற்றும் கார சட்னியுடன் சாப்பிடும் போது தோசை கூட நமக்கு போரடித்து விடும். இந்த சூழ்நிலையில் நாம் தோசைக்கு புதிய சைடிஷ் கண்டறிய வேண்டியது கட்டாயமாகிறது.
பொதுவாக பொட்டுக்கடலையை வைத்து தோசைக்கு சட்னி மட்டுமே அரைப்போம். ஆனால் பொட்டுக்கடலையை வைத்தே தோசைக்கு சூப்பரான சைடிஷ் ஒன்றை செய்யலாம். இந்த பொட்டுக்கடலை குழம்பு தோசை மட்டுமின்றி, இட்லி, பணியாரம் மற்றும் சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும். இந்த பொட்டுக்கடலை குருமாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு
- பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/2 மூடி
- வரமிளகாய் - 4
- சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
- நறுக்கிய பெரிய தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
-கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, தேங்காய், வரமிளகாய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூளை தூவி தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
- அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் நீரை சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.
- இதை சூடாக இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட தாறுமாறாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











