Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
2 உருளைக்கிழங்கும், 5 கத்திரிக்காயும் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. சும்மா அள்ளும்..
Potato Brinjal Curry Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு சிம்பிளாவும், அதே சமயம் டேஸ்ட்டியாவும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், கத்திரிக்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா செய்யுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு கத்திரிக்காய் மசாலாவை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் ருசியாக இருக்கும். சொல்லப்போனால் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த மசாலா பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை செய்தால் அடிக்கடி செய்யத் தொடங்கிவிடுவீர்கள்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு கத்திரிக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கத்திரிக்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* பெரிய கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி
உப்பு நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
* பின் கத்திரிக்காயையும் சற்று பெரிய துண்டுகளாக்கி, உப்பு நீரில் ஊற
வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்
தூள், மல்லித் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு
உருளைக்கிழங்குடன் சேருமாறு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து கிளறி, 5 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி
பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான



Click it and Unblock the Notifications











