Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
பிட்சா சாண்ட்விச்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. ஆனால் அந்த பிட்சாவை வீட்டிலேயே எளிமையாக பிரட் கொண்டு செய்யலாம். இது ஓர் அற்புதமான மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, காலை உணவாகவும் இருக்கும்.
சரி, இப்போது அந்த பிட்சா சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பிரட் - 4 துண்டுகள்
பாஸ்தா சாஸ் - 4 டீஸ்பூன்
வெங்காயம், குடைமிளகாய், தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
சீஸ் - 2 துண்டுகள்
சில்லி ப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் 2 பிரட் துண்டுகளை எடுத்து, அதன் மேல் பாஸ்தா சாஸைத் தடவ வேண்டும்.
பின்னர் அந்த ஒவ்வொரு பிரட் துண்டுகளின் இரண்டு முனைகளிலும் சிறிது காய்கறிகளை வைக்க வேண்டும்.
அடுத்து அதன் மேல் 2 சீஸ் துண்டுகளை நான்காக வெட்டி, சிறு துண்டுகளாக மடக்கி, காய்கறிகளின் மேல் வைக்கவும்.
பிறகு அதன் மேல் மீதமுள்ள பிரட் துண்டுகளை வைக்க வேண்டும்.
இறுதியில் பிரட் டோஸ்டரில் வெண்ணெயைத் தடவி, அதன் மேல் இந்த பிரட் துண்டுகளை வைத்து, பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்தால், பிட்சா சாண்ட்விச் ரெடி!!!



Click it and Unblock the Notifications







