1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!

Posted By:

Peanut Curd Chutney Recipe in Tamil: இந்திய உணவுகளில் தயிருக்கென்று எப்போதும் ஒரு தனியிடம் உள்ளது. அறுசுவை விருந்தாக இருந்தாலும் அதை தயிருடன் முடித்தால்தான் திருப்தியாக இருக்கும். தயிர் சுவையான பொருள் என்பதை விட அது ஆரோக்கியமான பொருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் தயிரை வைத்து ஒரு சட்னி செய்யலாம் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?

உண்மைதான் தயிரை வைத்து சுவையான சட்னியை விரைவாக செய்யலாம். தயிருடன் வேர்க்கடலை சேர்த்து செய்யப்படும் இந்த சட்னியானது இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சில நிமிடங்களில் செய்யக்கூடிய சைடிஷாகும். இந்த சுவையான சட்னியை செய்ய அதிகளவு பொருட்கள் தேவையில்லை, ஆனால் சுவையில் மற்ற எந்த சட்னிகளுக்கும் இது குறைந்தது அல்ல. இந்த சட்னி காரமாக இருக்காது, எனவே குழந்தைகள் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.

Peanut Curd Chutney Recipe How to Make Peanut Curd Chutney

உங்களுக்கு வேர்க்கடலை தயிர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை தயிர் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- ½ கப் வறுத்த வேர்க்கடலை
- ½ ஸ்பூன் சீரகம்
- 2 பச்சை மிளகாய்
- ½ கப் தயிர்

தாளிக்க:

- 1 ஸ்பூன் நெய்
- ½ ஸ்பூன் சீரகம்
- அரை கப் தயிர்
- தேவையான அளவு உப்பு
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை

செய்முறை:

- ஒரு மிக்சி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மென்மையான தூளாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

- ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடாக்கவும். பின்னர் சீரகம் சேர்த்து, அது வெடிக்கும் வரை வதக்கவும். அடுத்து, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கவும்.

- தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள 1 கப் தயிரையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- மேலும் 3 முதல் 4 நிமிடங்கள் சமைத்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

- அவ்வவுதான் சூப்பரான வேர்க்கடலை தயிர் சட்னி ரெடி. இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, March 27, 2026, 22:32 [IST]
Desktop Bottom Promotion