Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
15 நாள் இந்த பத்திய கஞ்சியை தொடர்ந்து குடிங்க... உங்க எடை டக்குனு குறைஞ்சு அழகா மாறிடுவீங்க...!
Pathiya Kanji Recipe in Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை, உப்புமா என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அதுவும் தற்போது சீசன் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதால், சமையலறையில் நீண்ட நேரம் நிற்க முடியாது. இந்நிலையில் டக்கென்று காலை டிபனை செய்ய பலரும் விரும்புவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கஞ்சி தான் பெஸ்ட் டிபன்.
அதுவும் வெறும் கஞ்சியை செய்வதற்கு பதிலாக, பாசி பயறு சேர்த்து பத்தியக் கஞ்சியை செய்து குடித்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் பிற சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் டயட்டில் இருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த காலை உணவு என்றே கூறலாம்.குறிப்பாக இந்த கஞ்சி வயிற்று வலி மற்றும் வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும். அனைத்துக்கும் மேல் எடையைக் குறைப்பவர்கள் இதை அவசியம் குடிக்க வேண்டும்.

இந்த கஞ்சியைக் குடித்தால் நீண்ட நேரம் பசி எடுக்காது. இந்த கஞ்சிக்கு ஊறுகாய் அல்லது தேங்காய் துவையல் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளும் விரும்பி குடிக்குமாறு இருக்கும்.
உங்களுக்கு பத்தியக் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பயிறு பத்தியக் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்:
- புழுங்கல் அரிசி - கால் கப்
- பாசிப்பயறு - 3 டீஸ்பூன்
- வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
- வெங்காயம் - பாதி
- பூண்டு - 3 பல்
- மோர் - 1 - 1 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பாசிப்பயறையும், வெந்தயத்தையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
- புழுங்கல் அரிசியைக் களைந்து, குழைவாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஊற வைத்த பாசிப்பயறையும் வெந்தயத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய பாதி வெங்காயம், பூண்டு, வேக வைத்த பாசிப்பயறு, வெந்தயம் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
- வெந்ததும் அதனுடன் குழைவாக வடித்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி ஆறவைக்கவும்.
- இந்த கலவை நன்கு ஆறியதும் மோர் கலந்து, தேவையெனில் மேலும் சிறிது உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
- வயிற்று வலி மற்றும் வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு, இந்தக் கஞ்சி மிகச் சிறப்பான காலை உணவாக இருக்கும்.
- காலை டிஃபனுக்கு பதிலாக, இந்தக் கஞ்சியைக் குடிக்க வேண்டும். இந்த கஞ்சியைத் தொடர்ந்து 15 நாட்களுக்குக் குடித்தால், வயிற்று வலி மற்றும் புண் குணமாகும். மேலும் இது எடையையும் விரைவில் குறைக்க உதவும்.



Click it and Unblock the Notifications










