Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
1 கப் அரிசியும், 3 ஸ்பூன் பாசிப்பருப்பும் இருந்தா இந்த ஸ்நாக்கை டக்குனு செய்யுங்க... டேஸ்ட் சூப்பரா இருக்கும்!
Pasi Paruppu Kolukattai Recipe in Tamil: தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான பலகாரங்களில் ஒன்று கொழுக்கட்டை. பொதுவாக கொழுக்கட்டை பெரிதாக இனிப்பு அல்லது கார சுவையில் செய்யப்படும். மாலை வேளையில் உங்கள் குடும்பத்தினர், குறிப்பாக குழந்தைகள் சாப்பிட ஏதாவது இனிப்பாக கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு சத்தான ஒரு பலகாரம் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இட்லி அரிசியும், பாசிப்பருப்பும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் சூப்பரான கார கொழுக்கட்டை செய்து கொடுங்கள்.
பாசிப்பருப்பு, இட்லி அரிசியும் சேர்த்து செய்யப்படும் இந்த கொழுக்கட்டை மென்மையானது மற்றும் சுவையானதும் கூட. உங்களுக்கு இந்த கார கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி - 1 கப்
- தண்ணீர் - 1 கப்
- பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
அரைக்க:
- இஞ்சி - 1 இன்ச்
- பச்சை மிளகாய் - 5
- கொத்தமல்லி இலைகள் - 1 கைப்பிடி
- கறிவேப்பிலை - 1 கொத்து
- துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிக்க:
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- இட்லி அரிசியை நன்றாக சுத்தமாக கழுவி குறைந்தது மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பாசிபருப்பை தனியாக 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
- இட்லி அரிசியை நைசாக அரைத்து கொள்ளவும்.
- பிறகு மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், கறிவேப்பில்லை, துருவிய தேங்காய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், அதில் கடலைபருப்பு மற்றும் சீரகத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்பொழுது அதில் நன்றாக அரைத்து வைத்துள்ள அரிசி மாவு விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து அடுப்பை மென்மையான தீயில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.
- பிறகு மாவு இறுகி கெட்டியானதும் , அதில் ஊறவைத்தள்ள பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கரண்டியை கொண்டு பிசைந்து கொள்ளவும்.
- பின்னர் உள்ளங்கையை சில்லென்ற குளிர்ந்த நீரில் நனைத்து சூடான மாவை சிறு எலுமிச்சை அளவிற்கு உருண்டைகளை பிடித்துக் கொள்ளவும்.
- இப்பொழுது இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டுகளை வைத்து அதன் மேல் இட்லி துணிகளை விரித்து அதன் மேல் உருண்டைகளை வைத்து இட்லி பாத்திரத்தை மூடியை குறைந்தது 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- பிறகு ஆவி அடங்கியதும் அடுப்பை அணைத்தால் சுடச்சுட சுவையான பாசிப்பருப்பு கொழுக்கட்டை ரெடி!



Click it and Unblock the Notifications











