Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
ருசியான... பன்னீர் புர்ஜி கிரேவி
இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இதற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு பன்னீர் புர்ஜி கிரேவி சரியானதாக இருக்கும்.
இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இதற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு பன்னீர் புர்ஜி கிரேவி சரியானதாக இருக்கும். இது செய்வது மிகவும் ஈஸி மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். உங்களுக்கு பன்னீர் புர்ஜி கிரேவி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள ஆசையா?

அப்படியானால் கீழே பன்னீர் புர்ஜி கிரேவி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து, உங்கள் வீட்டில் உள்ளோரை ஆச்சரியப்படுத்துங்கள். அதோடு உங்கள் அனுபவத்தையும் எங்களுடன் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப் (துருவியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* காய்ந்த வெந்தய கீரை - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 1
* பிரியாணி இலை - 1
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* சீரக பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பன்னீரை உதிர்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு அதில் துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து, பின் கிரேவிக்கு தேவையான நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து உதிர்த்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து சில நிமிடங்கள் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியில் கொத்தமல்லி மற்றும் உலர்ந்த வெந்தய கீரையை மேலே தூவி இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி கிரேவி தயார்.
* இது சப்பாத்தி, புல்கா, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











