Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
எப்பவும் ஒரே மாதிரி குழம்பு செஞ்சு போரடிச்சுடுச்சா? அப்ப இத ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
Pakoda Kulambu Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் அசைவம் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்று முடிவு செய்வதே பெரிய வேலையாக உள்ளதா? மேலும் எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார், குழம்பு செய்து போரடித்துவிட்டதா?
சற்று வித்தியாசமான ஏதாவது குழம்பு செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் பக்கோடா குழம்பை செய்யுங்கள். அதுவும் பஞ்சாபி ஸ்டைல் பக்கோடா குழம்பை செய்து சாப்பிடுங்கள். இப்படி குழம்பு செய்யும் போது, அது வெள்ளை சாதத்துடன் மட்டுமின்றி, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பக்கோடா குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி ஸ்டைல் பக்கோடா குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* தயிர் - 1 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
குழம்பிற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மல்லி தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
பக்கோடாவிற்கு...
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 2 சிட்டிகை
* கடலை மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கசூரி
மெத்தி, நன்கு அடித்த 1/2 கப் ஓரளவு கெட்டியான தயிர் சேர்த்து
கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாய்,
கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித் தூள் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கலந்து வைத்துள்ள தயிரை ஊற்றி, அத்துடன் 2 கப்
நீரையும் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, மிதமான
தீயில் வைத்து, 30 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் பக்கோடா செய்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு பாத்திரத்தில்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு
பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், தயிர்,
பேக்கிங் சோடா, கடலை மாவு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து, பக்கோடா போன்று எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* குழம்பு நன்கு சுண்டியதும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நெய் ஊற்றி
சூடானதும், சீரகம், வரமிளகாய், மல்லி, பெருங்காயத் தூள், காஷ்மீரி
மிளகாய் தூள் சேர்த்து கிளறி, குழம்புடன் சேர்த்து கிளறி, செய்து
வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கிளறினால், சுவையான பக்கோடா குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications











