எப்பவும் இட்லி தோசைக்கு சட்னி செய்யாம.. ஒருமுறை இந்த குருமாவை செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்...

Posted By:

Onion Kurma Recipe In Tamil: காலையில் இட்லி தோசைக்கு எப்பவும் சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? தினமும் இப்படி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று வெங்காய குருமாவை செய்யுங்கள்.

இந்த வெங்காய குருமா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, பூரி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

Onion Kurma How To Make a Onion Kurma Recipe

உங்களுக்கு வெங்காய குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* தண்ணீர் - 4 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 மூடி
* பச்சை மிளகாய் - 4
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன் (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 4 டம்ளர் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, ஊற வைத்த கசகசாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* வாணலியில் உள்ள நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெங்காய குருமா தயார்.

Image Courtesy: Chitra's Food Book

[ of 5 - Users]
Story first published: Monday, June 10, 2024, 7:59 [IST]
Desktop Bottom Promotion