வஞ்சரம் மீன் ப்ரை - சன்டே ஸ்பெஷல்!

Posted By:
Subscribe to Boldsky

விடுமுறை நாட்களில் தான் மீனை சமைத்து சாப்பிட முடியும். சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத் தான் பிடிக்கும். அப்படி மீன் ப்ரை பிடிக்குமானால், வஞ்சர மீன் வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள்.

இங்கு வஞ்சரம் மீன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Vanjaram Fish Fry

தேவையான பொருட்கள்:

வஞ்சரம் மீன் - 6-8 துண்டுகள்
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், எலுமிச்சை சாறு, சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் மீன் துண்டுகளை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீன் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இதேப்போல் மீதமுள்ள மீன் துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்தால், வஞ்சரம் மீன் ப்ரை ரெடி!!!

Image Courtesy: sharmispassions

Please Wait while comments are loading...
Subscribe Newsletter