For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முளைக்கட்டிய பயிர் சேர்த்து செய்யப்படும் முட்டை பொரியல்

By Maha
|

காலை வேளையில் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருளை உட்கொண்டால், நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அதிலும் முட்டையை சாப்பிட்டால், உடல் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி இருக்கையில், முட்டையுடன் சேர்த்து முளைக்கட்டிய பயிரை சாப்பிட்டால், அதன் ஆரோக்கியத்தை சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

அதெப்படி முட்டையுடன் முளைக்கட்டிய பயிரை சேர்த்து சாப்பிடுவது என்று பலர் கேட்கலாம். ஆனால் அதன் பொரியல் போன்று செய்து சாப்பிடலாம். இங்கு அந்த முளைக்கட்டிய பயிரை முட்டையுடன் சேர்த்து எப்படி பொரியல் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!

Sprout Scrambled Egg Recipe For Breakfast

தேவையான பொருட்கள்:

முட்டை - 4
விருப்பமான முளைக்கட்டிய பயிர் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

முட்டையானது நன்கு வெந்ததும், அதனை வாணலியுடன் இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் முளைக்கட்டிய பயிர்களை போட்டு, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, முட்டையுடன் சேர்க்க வேண்டும்.

பின் முட்டை உள்ள வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கிளறி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி இறக்கினால், சுவையான முளைக்கட்டிய பயிர் சேர்த்த முட்டை பொரியல் ரெடி!!!

English summary

Sprout Scrambled Egg Recipe For Breakfast

Take a look as to how you can make this yummy sprout scrambled egg recipe for breakfast.
Story first published: Tuesday, January 7, 2014, 18:17 [IST]
Desktop Bottom Promotion