Latest Updates
-
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா? -
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்.. -
1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
World Stroke Day 2026: உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
இந்திய வரலாற்றில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஒரே அரசர் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...
ஸ்பெசல் சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
சிக்கன் - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்
நெய் - 150 கிராம்
வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - அரை கிலோ
இஞ்சி,பூண்டு பேஸ்ட் 3 ஸ்பூன்
பட்டை, பிரியாணி இலை - சிறிதளவு
கிராம்பு,ஏலக்காய் - தலா 4
மல்லி தழை-1 கப்
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1கப்
மிளகாய் தூள் - 11/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
செய்முறை
குக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.
பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம்.
அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி
இதற்கு ராய்தா, எண்ணை கத்திரிக்காய் சேர்த்து பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications
