Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பீர்க்கங்காய் முட்டை பொரியல்
இதுவரை முட்டை பொரியலில் வெறும் வெங்காயம், தக்காளியை மட்டும் சேர்த்து தான் பொரியல் செய்திருப்பீர்கள். ஆனால் அதோடு ஏதேனும் காய்கறிகளை சேர்த்து பொரியல் செய்ததுண்டா? ஆம், முட்டை பொரியலில் பீர்க்கங்காயை சேர்த்து செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஆரோக்கியமானதும் கூட.
இங்கு அந்த பீர்க்கங்காய் முட்டை பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 1 (தோலுரித்து நறுக்கியது)
முட்டை - 4
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 கையளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மசாலா பொடிகளைத் தூவி, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, மூடி வைத்து 8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், பீர்க்கங்காய் முட்டை பொரியல் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
