Latest Updates
-
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
கல்மி கபாப்
நிறைய பேருக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய கபாப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கல்மி கபாப். பொதுவாக இதனை ஹோட்டல்களில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இந்த விடுமுறையில் நீங்கள் அந்த கல்மி கபாப் ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
இங்கு அந்த கல்மி கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1/4 கப்
மசாலாவிற்கு...
கிராம்பு - 3
வெங்காய விதை/பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
பிரியாணி இலை - 1
மிளகு - 5
செய்முறை:
முதலில் மசாலாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட வேண்டும்.
பிறகு சிக்கனை கத்தி கொண்டு லேசாக ஆங்காங்கு கீறி விட வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, குங்குமப்பூ, எலுமிச்சை சாறு, மைதா மற்றும் மசாலா பொடி ஆகியவற்றைப் போட்டு கிளறி, பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால், சிக்கன் துண்டுகளை அதனுள் வைத்து 15-20 நிமிடம் க்ரில் செய்து இறக்கவும் அல்லது க்ரில் கம்பி இருந்தால் அந்த கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி நெருப்பில் வாட்டி எடுக்கவும். இப்போது சுவையான கல்மி கபாப் ரெடி!!!



Click it and Unblock the Notifications
