Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
தஹி சிக்கன்
தற்போது உடல் எடையை குறைக்க நிறைய பேர் முயற்சிப்பதால், அத்தகையவர்களுக்காக ஒரு எளிமையான சிக்கன் ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இந்த சிக்கன் ரெசிபிக்கு தஹி சிக்கன் என்று பெயர். இந்த ரெசிபியின் ஸ்பெஷல், தயிரைக் கொண்டு செய்வது தான். இது மிகவும் எளிமையான மற்றும் வித்தியாசமான சுவையைக் கொண்டது.
சரி, இப்போது அந்த தஹி ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
குறைந்த கொழுப்பு கொண்ட தயிர் - 2 1/2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சீரகப் பொடி, பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் மற்றும் தயிர் ஊற்றி கிளறி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
30 நிமிடம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து, தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 10 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும். சிக்கன் வெந்துவிட்டால், அடுப்பை அணைத்து இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான தஹி சிக்கன் ரெடி!!!



Click it and Unblock the Notifications
