For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செட்டிநாடு மட்டன் குழம்பு

By Maha
|

மட்டன் குழம்புகளிலேயே செட்டிநாடு மட்டன் குழம்பு மிகவும் சுவையானது. இந்த குழம்பை பார்த்தாலே அனைவருக்கும் பசி எடுக்கும். மேலும் இதன் மணத்திற்கு ஈடு வேறு எதிலும் இருக்காது. இத்தகைய செட்டிநாடு மட்டன் குழம்பை பலர் வீட்டில் முயற்சி செய்திருப்பார்கள். இருப்பினும் உண்மையான செட்டிநாடு மட்டன் குழம்பின் சுவை கிடைக்காமல் இருக்கும்.

ஆகவே உண்மையான செட்டிநாடு மட்டன் குழம்பின் சுவை வேண்டுமானால், கீழே குறிப்பிட்டுள்ளது போன்று முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் அருமையாக இருக்கும். சரி, அந்த செட்டிநாடு மட்டன் குழம்பில் ரெசிபியைப் பார்ப்போமா!!!

Chettinad Mutton Kulambu Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
அன்னாசிப்பூ - 1
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்ழுன்
தக்காளி - 2 (நறுக்கியது)
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
மல்லி - 2 டீஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
முந்திரி - 5

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அது காய்ந்ததும், மசாலாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு 3-4 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.

பின்பு அது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், சற்று கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட்டு, ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், அதனைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது நன்கு கொதித்தும், உப்பு சுவை பார்த்து, உப்பு போதாமல் இருந்தால், அதில் இன்னும் சிறிது உப்பு சேர்த்து கிளறி ஒரு கொதி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி!!!

English summary

Chettinad Mutton Kulambu Recipe

Chettinad cuisine is a real delight for meat lovers. The unique blend of the spices used in the Chettinad preparations make the curries totally irresistible for your taste- buds. Here is a famous Chettinad mutton kulambu recipe which is sure to delight your taste-buds.
Story first published: Tuesday, September 24, 2013, 13:28 [IST]
Desktop Bottom Promotion