For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செய்வதற்கு ஈஸியான எலும்பில்லாத சில்லி சிக்கன்- ரம்ஜான் ஸ்பெஷல்!!

By Bala Karthik
|

நீங்கள் எவ்வளவோ உணவு வகைகளை சாப்பிட்டு மனதளவில் உணர்ந்திருந்தாலும்…இந்த சிக்கன் சமையல் வித்தியாசமான ஒன்று என்பதே உண்மை. அதிலும் இன்றைய தலைமுறைக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் வேண்டாம்.

உங்கள் நேரத்தை வீணடிக்காமல் இப்பொழுது இந்த சமையலுக்கு தேவையான பொருட்களையும், வழிமுறைகளையும் நாம் இப்பொழுது பார்க்கலாம்.

பரிமாற – 2 நபர்

தயாரிக்க தேவையான நேரம்: 5 நிமிடங்கள்

சமைக்க ஒதுக்கப்பட வேண்டிய நேரம் – 35 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:
போன் லெஸ் சிக்கன் – 350 கிராம் (துண்டுகளாக நறுக்கப்பட்டது)
சோள மாவு – ½ கப்
முட்டை – 1 (உடைக்கப்பட்டது)
பூண்டு பேஸ்ட் – ½ டீ ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் – ½ டீ ஸ்பூன்
நன்றாக வறுக்க தேவையான எண்ணெய்
சுவைக்கு தேவைக்கேற்ப உப்பு
வெங்காயம் – 2 கப் (நன்றாக நறுக்கப்பட்டது)
சோயா சாஸ் – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நன்றாக நறுக்கப்பட்டது, விதைகள் நீக்கப்பட்டது)
வினிகர் – 2 டீ ஸ்பூன்

தண்ணீர் தேவைக்கேற்ப…

செய்முறை:

சோள மாவு, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, முட்டை, தண்ணீர் ஆகியவற்றை கரைத்து கொள்ள வேண்டும். கரைத்து வைத்திருக்கும் பொருள்களுடன் சிக்கன் பீஸ்களை நன்றாக தூவ வேண்டும்.

ஒரு ஆழமான அடிப்பாகத்தை கொண்ட கடாயை (பாத்திரம்) அடுப்பில் வைத்து, எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி வறுக்கவேண்டும். பின்னர் எண்ணெயில் சிக்கன் பீஸ்களை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்… அதன் பின்னர் பீஸ்களை எடுத்துவிட்டு எக்ஷ்ட்ரா இருக்கும் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தும் துணியை கொண்டு ஊற வைக்க வேண்டும்.


மறுபடியும் 2 டீ ஸ்பூன்கள் எண்ணெயை எடுத்துகொண்டு அதனை நன்றாக சூடுபடுத்த வேண்டும். அதன் பிறகு வெங்காயத்தை தங்க பழுப்பு நிறம் வரும்வரை நன்றாக வறுத்து…பின்னர் பச்சை மிளகாயையும் வறுத்து மிருதுவாக்க வேண்டும்.

அதன் பிறகு, சோயா சாஸ், வினிகர், மற்றும் வறுக்கப்பட்ட சிக்கன் பீஸ்களை கடாயில் போட்டு நன்றாக புரட்டி போட வேண்டும். உங்களுக்கு க்ரேவி வேண்டுமென்றால்… தண்ணீரை அதிகம் சேர்க்க மறந்துவிடாதீர்கள். அப்பொழுது தான் நிலையான கலவை தன்மையை நீங்கள் பெற முடியும்.


இந்த முறைகளை நீங்கள் செய்து முடிக்க… சுவையான போன்லெஸ் சில்லி சிக்கன் ரெடி!!!

English summary

Boneless Chilli Chicken Recipe For Ramzan

Boneless Chilli Chicken Recipe For Ramzan
Desktop Bottom Promotion