1/4 கப் கடலைப்பருப்பு இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. கணக்கில்லாம சாப்பிடுவாங்க...

Posted By:

No Onion No Tomato Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசையை அடிக்கடி செய்வீர்களா? அதற்கு பெரும்பாலும் சட்னியை தான் செய்வீர்களா? அதுவும் தேங்காய் சட்னி, இல்லாவிட்டால் வெங்காயம் மற்றும் தக்காளி கொண்டு கார சட்னி, தக்காளி சட்னி என்று தான் செய்வீர்களா? இப்படி எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து அலுத்துவிட்டதா?

உங்கள் வீட்டில் சட்னி செய்ய வெங்காயம், தக்காளி எதுவும் இல்லையா? அப்படியானால் அந்த இரண்டும் இல்லாமலேயே அருமையான சுவையில், வெறும் கடலைப்பருப்பு வைத்து சட்னி செய்யலாம். இந்த சட்னி சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்ய குறைவான பொருட்களே போதுமானது. இப்படியான சட்னியை பேச்சுலர்களும், வேலைக்கு செல்பவர்களும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

No Onion No Tomato Chutney How To Make a Bengal Gram Chutney

உங்களுக்கு வெங்காயம் தக்காளி சேர்க்காத கடலைப்பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி சேர்க்காத கடலைப்பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* வரமிளகாய் - 8
* பூண்டு - 6 பல்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* புளி - 2 இன்ச்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சீரகம் மற்றும் புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வெங்காயம் தக்காளி சேர்க்காத கடலைப்பருப்பு சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 10, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion