மட்டன் வாங்குனா இந்த மாதிரி தொக்கு செஞ்சு சாப்பிடுங்க... இட்லி, தோசைக்கு மற்றும் சாதத்துக்கு சூப்பரா இருக்கும்

Posted By:

Mutton Thokku Recipe in Tamil: சண்டேவான இன்று உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? எப்போதும் மட்டனை வைத்து குழம்பு அல்லது வறுவல்தான் செய்கிறீர்களா? ஆம் எனில் இந்த முறை மட்டனை வைத்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் மட்டனை தொக்கு செய்து பாருங்கள். இந்த மட்டன் தொக்கு எளிதில் செய்யக்கூடியது மேலும் இது சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு சுவையான மட்டன் தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Mutton Thokku Recipe How to Make Mutton Thokku
தேவையான பொருட்கள்:

- மட்டன் - அரை கிலோ

- மல்லித்தூள் - 1 ஸ்பூன்

- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

- சீரகத் தூள் - 1 ஸ்பூன்

- சோம்பு பொடி - 1 ஸ்பூன்

- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

- தயிர் - 2 ஸ்பூன்

- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

- உப்பு - தேவையான அளவு.

- கொத்தமல்லி தழை - சிறிதளவு

தாளிக்க :

- பட்டை 2

- கிராம்பு- 4

- வெங்காயம் - 1

- பச்சை மிளகாய் - 2

- எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை:

- மட்டன், தேவையான மஞ்சள்தூள், அளவு தயிர், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

- வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி, சீரகப் பொடி, சோம்பு பொடி சேர்த்து கிளறவும்.

- அதனுடன் ஊற வைத்த மட்டனை சேர்த்து 5 10 நிமிடம் நன்றாக கிளறவும். மட்டனில் இருந்து தண்ணீர் வரும். அதனால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. உப்பு சரி பார்த்து தேவையான கொள்ளவும்.

- பிறகு குக்கரை மூடி விசில் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 20-25 நிமிடங்கள் அல்லது மட்டன் வேகும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.

- நீராவி அடங்கியதும் திறக்கவும். மட்டனில் அதிகமாக இருந்தால் மூடியை தண்ணீர் தண்ணீர் வற்றும் வரை குக்கர் மூடி போடாமல் கொதிக்க வைக்கவும்.

- தண்ணீர் வற்றியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான மட்டன் தொக்கு ரெடி.

- இதை சூடான சாதத்துல போட்டு பிசைஞ்சு சாப்பிடுங்க சூப்பராக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 13, 2025, 12:16 [IST]
Desktop Bottom Promotion