Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
மழை நேரத்துல 5 முட்டை இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
Muttai Gravy For Chapati In Tamil: தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், அனைவருக்கும் நன்கு காரசாரமாகவும் வாய்க்கு ருசியாகவும் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அந்த முட்டையைக் கொண்டு கிரேவி செய்யுங்கள்.
இந்த முட்டை கிரேவி வழக்கமாக செய்யும் முட்டை கிரேவியில் இருந்து மாறுபட்டது. ஆனால் இந்த பக்குவத்தில் ஒருமுறை முட்டை கிரேவியை செய்தால், பின் அடிக்கடி இந்த கிரேவியை செய்வீர்கள். முக்கியமாக இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* முட்டை - 5
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 2
* வெங்காயம் - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கசூரி மெத்தி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் 5 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன்
மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு
அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு டிபன் பாக்ஸில் எண்ணெய் தடவி, அதில் அடித்து வைத்துள்ள
முட்டைகளை ஊற்றி, டிபன் பாக்ஸை மூடி, இட்லி பாத்திரத்தில் வைத்து
மூடி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி,
பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி, எண்ணெய்
பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்
தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
மிதமான தீயில் வைத்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து,
5 நிமிடம் நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* டிபன் பாக்ஸில் உள்ள முட்டை நன்கு குளிர்ந்த பின், கத்தி கொண்டு
சிறு சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்த பின், மூடியைத் திறந்து அதில் முட்டை
துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம்
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்து, முட்டையில் மசாலா நன்கு இறங்கியதும்,
கடைசியாக கசூரி மெத்தியை சிறிது எடுத்து கைகளால் நசுக்கி மேலே தூவி
கிளறி இறக்கினால், சுவையான முட்டை கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











