Latest Updates
-
குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? வெந்நீரா? உடலில் முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்? -
நவம்பர் 12-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்! -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிற்குள் இருக்கும் கிராமம் - இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 11, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நவம்பர் 13-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வது இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்தில் தள்ளப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி வித்தியாசமான குருமா செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
உங்கள் முழங்கால் ரொம்ப கருப்பா இருக்கா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை வைச்சே வெண்மையாக்கிரலாம் -
பார்லர் போகாமலே பளபளப்பான முகம் வேண்டுமா? இதோ 5 சூப்பரான சந்தன ஃபேஸ் பேக்குகள்!
முட்டையும், காளானும் இருந்தால் இந்த மாதிரி வித்தியாசமா ஆம்லெட் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும்
Mushroom Omelette Recipe in Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா என்று ஒரே மாதிரியான டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் சுவையான மற்றும் சத்தான காலை உணவை சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டையும், காளானும் இருந்தால், அவற்றை வைத்து ஒரு வித்தியாசமான மற்றும் சுவையான காலை உணவை செய்யுங்கள்.

இந்த மஷ்ரூம் ஆம்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையில் இருக்கும். முட்டை, மஷ்ரூம் இரண்டுமே குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். எனவே இவற்றைக் கொண்டு ஆம்லெட் செய்து காலை உணவாக சாப்பிடும் போது வயிறும் நிறையும், சுவையாகவும் இருக்கும். மேலும் இவை இரண்டுமே ஆரோக்கியமானவை என்பதால் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.
உங்களுக்கு சத்தான மஷ்ரூம் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஷ்ரூம் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை கலவைக்கு:
- முட்டை - 6
- மிளகுத் தூள் - ½ டீ ஸ்பூன்
- பட்டன் காளான் - 200 கிராம்
- வெங்காயம் - 1
- பூண்டு - 4 பல்
- காய்ந்த மிளகாய் துகள்கள் - 1 டீ ஸ்பூன்
- வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- மொஸரெல்லா சீஸ் - ½ கப்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சையை நீக்க நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- காளானை மண் இல்லாமல் சுத்தமாக கழுவி, பொடியாக நறுக்கி
கொள்ளவும்.
மொஸரெல்லா சீஸை ½ கப் அளவிற்கு துருவி தனியே எடுத்து வைத்து
கொள்ளவும்.
- காய்ந்த மிளகாய் துகள்கள் வீட்டில் இருந்தால் எடுத்து கொள்ளவும். இல்லையென்றால், இரண்டு அல்லது மூன்று வரமிளகாயை வாணலியில் மிதமான தீயில் வறுத்து, அரைத்து தூளாக்கி எடுத்து கொள்ளவும்.
- ஒரு கிண்ணத்தில் முட்டைகளை ஓடுகள் இல்லாமல் உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடானதும், நறுக்கிய காளான் துண்டுகளை நேரடியாக வாணலியில் சேர்க்கவும். பின் முழுமையான தீயில் 4 அல்லது 5 நிமிடங்கள் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்க்காமல் வதக்கவும்.
- முதலில் காளானில் இயற்கையாகவே இருக்கும் தண்ணீர் வெளியேறி காளான் வேக துவங்கும். பின் நன்கு நிறம் மாறி பொன்னிறமாகும் வரை வதக்கவும். தண்ணீர் முழுவதும் ஆவியாகும் வரை காத்திருக்கவும்.
- பின் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும். அதனுடன் மிளகாய் துகள்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்களுக்கு நன்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து நன்கு பரப்பி தேய்த்து விடவும். கல் சூடானதும், அடித்து வைத்த முட்டை கலவையை சேர்த்து நன்கு கல்லில் பரப்பி விடவும்.
- அதன் மேற்பரப்பில் வதக்கி வைத்த காளானை நீங்கள் விரும்பும் வடிவில் சேர்த்து கொள்ளவும். முட்டை ஓரளவிற்கு வெந்ததும் துருவி வைத்த மொஸரெல்லா சீஸைத் தூவவும்.
- முட்டையின் ஒரு பாதியை கரண்டியால் எடுத்து மடித்து மற்றொரு பகுதில் படும் படி மூடி, இரண்டு பக்கமும் சேர்த்து சில நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான மஷ்ரூம் ஆம்லேட் ரெடி!



Click it and Unblock the Notifications
