மூட்டு வலி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் முடக்கத்தான் கீரை தோசை - எப்படி செய்றதுன்னு பாருங்க..

Posted By:

Mudakathan Keerai Dosai Recipe In Tamil: இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் ஒரு அற்புதமான கீரை தான் முடக்கத்தான் கீரை. நிறைய பேர் முடக்கத்தான் கீரை மூட்டு வலி பிரச்சனையில் இருந்து மட்டும் தான் நிவாரணம் அளிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் இந்த கீரையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இந்த கீரையைக் கொண்டு வாரம் 2 முறை தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால், பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். எனவே அடுத்தமுறை மார்கெட் சென்றால், முடக்கத்தான் கீரையைப் பார்த்தால், மிஸ் பண்ணாமல் வாங்கி வந்து, தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, ஒரு சிறந்த காம்பினேஷனாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Mudakathan Keerai Dosai How To Make a Mudakathan Keerai Dosa Recipe

உங்களுக்கு முடக்கத்தான் கீரை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முடக்கத்தான் கீரை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைல் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முடக்கத்தான் கீரை - 1 கட்டு
* பச்சை மிளகாய் - 1
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* மிளகு - 10
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தோசை மாவு - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் முடக்கத்தான் கீரையை நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் கழுவிய முடக்கத்தான் கீரையை எடுத்து, அத்துடன் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தோசை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள முடக்கத்தான் கீரை பேஸ்ட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவைக் கொண்டு தோசை ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான முடக்கத்தால் கீரை தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 21, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion